படம் : குழந்தையும் தெய்வமும்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி
நடிகர்கள் : ஜெய்சங்கர், ஜமுனா
அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம் - நான்
எழுதுவதென்னவென்றால் - உயிர்க்
காதலில் ஓர் கவிதை
அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம் - நான்
கைகளில் எழுதவில்லை - அதைக்
கண்ணீரில் எழுதி வந்தேன்
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தான முத்துச் சுடரே
இளைய கன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
(அன்புள்ள)
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
இடை மெலிந்தது இயற்கையல்லவா
நடை தளர்ந்தது தனிமை அல்லவா
வண்ணப் பூங்கொடிபெண்மை அல்லவா
வாட வைத்ததும் உண்மை அல்லவா
(அன்புள்ள)
2 comments:
பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் அல்ல. கவிஞர் வாலி.
கவிஞர் வாலியின் பாடல்கள் கண்ணதாசன் பாடல்களை ஓத்தது மாதி உண்டு ஆனால் கண்ணதாசன் பாணி வேறு. அவருக்கு இணையாக யாரும் இதுவைரை இல்லை, கவிப்பேரரசு கூட பல இடங்களில் கண்ணதாசனைப் புழ்ந்திருக்கிறார். அவருக்கு நிகர் அவரே தான்.
Post a Comment