குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : சிவாஜி, விஜய நிர்மலா
அம்மாக் கண்ணு சும்மா சொல்லு
ஆசை இல்லையோ என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளிக் கட்டிக் கொள்ளும்போது
இன்பம் வல்லையோ அந்த இன்பம் வல்லையோ
ஏதோ சொன்னேன் கோபம் கொண்டேன்
பாசம் இல்லாமே - நீங்க
இப்போ சொன்னா ஏதும் செய்வேன்
கோபம் கொள்ளாமே.. கோபம் கொள்ளாமே..
வாடா கண்ணு உன்னைப் போலே ராஜாத்தி உண்டோ
ஆஹா.. மாமா உன்னைப் போலே நல்ல மாப்பிள்ளை உண்டோ
மாமாக் கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ
\
என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளிக் கட்டிக் கொள்ளும்போது
இன்பம் வல்லையோ அந்த இன்பம் வல்லையோ
பூவும் பொட்டும் சேலைக் கட்டும் போதை சிந்துதடி - நீ
போர்த்து போர்த்து பேசும்போது மோகம் பொங்குதடி
மோகம் பொங்குதடி
பொன்னும் பெண்ணும் இன்றும் என்றும் மாமா சொந்தமடி - நான்
பொல்லாப் பொண்ணு இல்லை என்று வந்தேன் நல்ல வழி
வந்தேன் நல்ல வழி
(அம்மா)
நானா வந்து தானாத் தந்தா நல்லா இல்லையின்னு - நான்
ஓடிப் பாத்து ஒளிஞ்சு பாத்து வந்தேன் சொந்தமின்னு
வந்தேன் சொந்தமின்னு
தேனாச் சிந்தும் ரோஜாப் பந்தை நானா அள்ளட்டுமா
பூஞ்செவ்வாய் தொட்டு ஒண்ணோ ரெண்டோ முத்தம் சிந்தட்டுமா
முத்தம் சிந்தட்டுமா
(அம்மா)
No comments:
Post a Comment