Tuesday, July 1, 2008

ஆடலுடன் பாடலைக் கேட்டு..

பாடல்: ஆடலுடன் பாடலைக் கேட்டு 
திரைப் படம்: குடியிருந்த கோயில் 
பாடியவர்கள்: டி.எம்.ஸௌந்திர ராஜன், பி.சுசீலா 
இசை: எம்.எஸ்.வி 
நடிப்பு: எம்.ஜி.ஆர், எல்.விஜயலஷ்மி

சுசீலா: 
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் 

டி.எம்.எஸ்: 
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் 

இருவரும்: 

கண்ணருகில் பெண்மை குடி ஏற கையருகில் இளமை தடுமாற 
தென்னை இள நீரின் பதமாக ஒன்று நான் தரவா இதமாக  

செங்கனியில் தலைவன் பசியாற தின்ற இடம் தேனின் சுவையூற 
பங்கு பெற வரவா துணையாக 

மன ஊஞ்சலின் மீது பூ மழை தூவிட உரியவன் நீ தானே  

இருவரும்: 
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் 
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும்  

டி.எம்.எஸ்: 
கள்ளிருக்கும் மலரே வளைந்தாடு களைப்பாற மடியில் இடம் போடு 
முள்ளிருக்கும் நினைவில் உறவாடு உலகையே மறந்து விளையாடு 

விம்மி வரும் அழகில் நடை போடு வந்திருக்கும் மனதை எடை போடு 
வேண்டியதைப் பெறலாம் துணிவோடு 

உன் பாதையிலே நான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு  

சுசீலா: 
ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் 

டி.எம்.எஸ்: 
ஆசை தரும் பார்வையில் எல்லாம் ஆயிரம் எண்ணம் வரும் வரும் வரும் 

இருவரும்: ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் 

No comments: