Tuesday, July 1, 2008

அந்த மாப்பிள்ளை

பாடல்: அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
திரைப் படம்: பணம் படைத்தவன்
பாடியவர்கள்: பீ.சுசீலா, டி.எம்.சௌந்தர ராஜன்
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
வரிகள்: வாலி
நடிகர்கள்: எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா
சுசீலா: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
கையைப் புடிச்சான்
என்னை கையை புடிச்சான்
அங்கே முன்னால் நின்றேன் பின்னால் சென்றேன்
வா வா என்றான்
கூடவே வா வா என்றான்
அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
கையைப் புடிச்சான்
என்னை கையை புடிச்சான்
அங்கே முன்னால் நின்றேன் பின்னால் சென்றேன்
வா வா என்றான்
கூடவே வா வா என்றான்
ஊர் அடங்கக் காத்திருந்தான்
ஓய்வில்லாமே பார்த்திருந்தான்
ஊர் அடங்கக் காத்திருந்தான்
ஓய்வில்லாமே பார்த்திருந்தான்
பால் பழத்தை வாங்கி வந்தான்
பள்ளியறையின் வாசல் வந்தான்
வெட்கத்திலே நானிருந்தேன்
பக்கத்திலே தானிருந்தான்

அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
கையைப் புடிச்சான்
என்னை கையை புடிச்சான்
அங்கே முன்னால் நின்றேன் பின்னால் சென்றேன்
வா வா என்றான்
கூடவே வா வா என்றான்
கண்ணுறங்க பாய் விரிச்சான்
கொடி இடையில் காய் பறிச்சான்
கண்ணுறங்க பாய் விரிச்சான்
கொடி இடையில் காய் பறிச்சான்
குத்து விளக்கைக் கொறச்சி வைச்சான்
கொதிச்சிருந்தேன் குளிர வைத்தான்
வெட்கத்திலே நானிருந்தேன்
பக்கத்திலே தானிருந்தான்

டி.எம்.எஸ்: ஓஓஓஓஓஓஓஓஓஓ
மண்ணளந்த பார்வை என்ன
மயங்க வைத்த வார்த்தை என்ன
மண்ணளந்த பார்வை என்ன
மயங்க வைத்த வார்த்தை என்ன
முத்து நகையின் ஓசை என்ன
மூடி வைத்த ஆசை என்ன
என்னருகே பெண்ணிருந்தா
பெண்ணருகே நானிருந்தேன்
அந்தப் பூங்கொடி பூத்திருந்தா
காத்திருந்தா
என்னைப் பார்த்திருந்தா
அங்கே கண்ணால் கண்டேன்
பின்னால் சென்றேன்
நீ தான் என்றேன்
வாழ்வே நீ தான் என்றேன்
கட்டழகைப் பார்த்து நின்னேன்
கண்ணிரண்டில் பாடம் சொன்னேன்
கட்டழகைப் பார்த்து நின்னேன்
கண்ணிரண்டில் பாடம் சொன்னேன்
மொட்டு சிரித்தாள் விட்டுக் கொடுத்தாள்
தொட்டுக் கொடுத்தேன்
தானும் கொடுத்தாள்
அம்மம்மா என்ன சுகம்
அத்தனையும் கன்னி சுகம் அந்தப் பூங்கொடி பூத்திருந்தா
காத்திருந்தா
என்னைப் பார்த்திருந்தா
அங்கே கண்ணால் கண்டேன்
பின்னால் சென்றேன்
நீ தான் என்றேன்
வாழ்வே நீ தான் என்றேன்

சுசீலா: அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
கையைப் புடிச்சான்
என்னை கையை புடிச்சான்
அங்கே முன்னால் நின்றேன் பின்னால் சென்றேன்
வா வா என்றான்
கூடவே வா வா என்றான்

No comments: