Tuesday, July 1, 2008

ஆகாயப் பந்தலிலே

பாடல்: ஆகாயப் பந்தலிலே திரைப் படம்: பொன்னூஞ்சல் பாடியவர்கள்: டி.எம்.ஸௌந்திர ராஜன், பி.சுசீலா இசை: எம்.எஸ்.வி நடிப்பு: சிவாஜி, உஷா நந்தினி

டி.எம்.எஸ்: ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா

சுசீலா: ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா சுசீலா: பூச் சூடி புதுப் பட்டு நாம் சூடி மணச் செம்பு கையேந்தி நாம் அங்கே போவோமா
பூச் சூடி புதுப் பட்டு நாம் சூடி மணச் செம்பு கையேந்தி நாம் அங்கே போவோமா
மீனாவின் குங்குமத்தை மீனாவின் குங்குமத்தை நான் ஆள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா

டி.எம்.எஸ்: பால் வண்ணம் பழத் தட்டு பூங்கிண்ணம்
மணப் பெண்ணின் தாய் தந்த சீராகக் காண்போமா
பால் வண்ணம் பழத் தட்டு பூங்கிண்ணம்
மணப் பெண்ணின் தாய் தந்த சீராகக் காண்போமா
ஊராரின் சன்னிதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாய் என்றும் சேய் என்றும் தந்தை என்றும் ஆவோமா ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

சுசீலா: கண்ணென்றும் வளை கொண்ட கையென்றும்
இவள் கொண்ட அங்கங்கள் நீ வாழும் இல்லங்கள்

டி.எம்.எஸ்: பொன் மாலை அந்தியிலே என் மாலை தேடி வரும்
அம்மா உன் பெண் உள்ளம் ராகம் சொல்லி ஆடி வரும்


இருவரும்: ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா

No comments: