படம் : கோமாதா என் குலமாதா
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : சங்கர் கணேஷ்
நடிகை : பிரமீளா
அன்புத் தெய்வம் நீ எங்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா அம்மா என்று
(அன்பு)
பண்பால் அன்பால் பாசத்தின் பிணைப்பால்
பசுவே நீ தரும் பால்..
உன்பால் உலகை உருகிடச் செய்யும்
பெண்பால் நீ எனப் பேசிடச் செய்யும்
பசுவுக்குப் பெண்ணும் பென்ணுக்குப் பசுவும்
பந்தம் திருமகளே - இந்தப்
பெண்ணுக்கு பசுவும் பசுவுக்குப் பெண்ணும்
சொந்தம் குலமகளே
(அன்பு)
இன்னார் வளர்த்தார் என்பதை அறிவாய்
வந்தால் முகம் தருவாய்
வாழ்ந்தால் பாலும் மறைந்தால் தோலும்
அடுத்தொரு கன்றும் கொடுப்பவள் நீயே
குங்குமம் இட்டு மஞ்சளும் வைத்தோம்
தருமத் தேவதையே
கோவிலை உந்தன் மேனியில் கண்டோம்
தேவர் குலமகளே
பசுவுக்குப் பெண்ணும் பென்ணுக்குப் பசுவும்
பந்தம் திருமகளே - இந்தப்
பெண்ணுக்கு பசுவும் பசுவுக்குப் பெண்ணும்
சொந்தம் குலமகளே
(அன்பு)
No comments:
Post a Comment