பாடல்: ஆஹா மங்கள மேளம்
திரைப் படம்: கை கொடுத்த தெய்வம்
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
வரிகள்: கண்னதாசன்
நடிப்பு: கே.ஆர்.விஜயா, சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன்
ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள்
வந்தாள் தங்கத் தேரிலே
ஆஹா மல்லிகைப் பூவிலும் மெல்லிய மாது மயங்கி
விட்டாளே உன் பேரிலே
கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம்
ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள்
வந்தாள் தங்கத் தேரிலே
ஆஹா மல்லிகைப் பூவிலும் மெல்லிய மாது மயங்கி
விட்டாளே உன் பேரிலே
அவள் அன்ன நடை பின்னலிட வந்தாளாம்
என் அண்ணனிடம் கண்ணிரண்டைத் தந்தாளாம்
அந்த அங்கயற்கண்ணியைப் பார்த்து
அண்ணன் சங்கதி சொன்னதைக் கேட்டு
நெஞ்சில் துள்ளி எழுந்தது பாட்டு
அது தொட்டிலிலே தாலாட்டு
ஆரி ஆரிராரிராரோ ஆரிராரிராரோ ஆரிராராரோ
ஆரிராரிராரிராரோ ஆரிராரிராரோ ஆரிராராரோ
ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள்
வந்தாள் தங்கத் தேரிலே
ஆஹா மல்லிகைப் பூவிலும் மெல்லிய மாது மயங்கி
விட்டாளே உன் பேரிலே
கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம்
நல்ல அத்தை இவள் பெண் மகளைப் பெற்றாளாம்
அதை அண்ணன் மகன் கண்ணனுக்கே விற்றாளாம்
தமிழ்க் குமரன் வள்ளியைப் போலே
அவர் குலவிக் கொண்டதினாலே
அங்கு தழைத்து வந்தது குழவி
அதைத் தழுவிக் கொண்டாள் கிழவி
ஆஹா மங்கள மேளம் பொங்கி முழங்க மணமகள்
வந்தாள் தங்கத் தேரிலே
ஆஹா மல்லிகைப் பூவிலும் மெல்லிய மாது மயங்கி
விட்டாளே உன் பேரிலே
கல்யாண ஊர்வலம் உல்லாசம் ஆயிரம்
No comments:
Post a Comment