Tuesday, July 1, 2008

ஆண் கவியை வெல்ல வந்த

படம் : வானம்பாடி
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : கே.வி.மஹாதேவன்
நடிகர்கள் : எஸ்.எஸ்.ஆர்., தேவிகா
கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே
கவி மழையில் ஆடி வரும் கன்னி இளமயிலே
சொல்லோடு பொருளேந்தி விளையாட வந்தேன்
துணை வேண்டும் தாயே நின் திருவடிகள் வாழ்க !
பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தமிழே
பூங்கவிதை வானேறி தவழ்ந்து வரும் நிலவே
மதியறியாச் சிறு மகளும் கவி பாட வந்தேன்
மன்றத்தில் துணை நின்று வாழ்த்துவாய் தாயே !
ஆங்.. நடக்கட்டும்
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக - நீ
அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக
பெண் கவியை வெல்ல வந்த பெருமகனே வருக - உங்கள்
பெட்டகத்தைத் திறந்து வைத்துப் பொருளை அள்ளித் தருக
இலை இல்லாமல் பூத்த மலர் என்ன மலரம்மா? - அது
இளமை பொங்க வீற்றிருக்கும் கன்னி மலரையா
வலையில்லாமல் மீனைப் பிடிக்கும் தேசம் என்ன தேசம்?- அது
வாலிபரின் கண்ணில் உள்ள காதல் என்னும் தேசம் (ஆண்)
காதல் வந்தால் மேனியிலே என்ன உண்டாகும்? - அது
கன்னியரைக் கண்டவுடன் கால்கள் தள்ளாடும்
காதலித்தாள் மறைந்து விட்டால் வாழ்வு என்னாகும்? - அன்பு
காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்
ஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு - அந்த
ஒன்று எது என்பதுதான் கேள்வி இப்போது
வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு ? - தன்
வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது
(ஆண்)
உன்னுடைய கேள்விக்கெல்லாம் அவங்க பதில் சொல்லிட்டாங்க
இனிமேல் அவங்க கேள்வி கேக்கலாமில்லே?
ம்ம் கேக்க சொலூங....
தாதி தூது தீது தத்தும் தத்தை சொல்லாது.. (ஆ..)
தூதி துது ஒத்தித்தது தூது செல்லாது.. (என்னது?)
தேது தித்தித் தொத்து தீது தெய்வம் வராது (ஓஹோஹோஹோஹோ) - இங்கு
துத்தி தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது..

ஹாஹா.. கேள்வியா இது ? என்ன உளர்றாங்க ?
ஊக்கும்.. அவங்க ஒண்ணும் உளறலே.. நீதான் திணர்றே
நான் திணர்றேனாவது..
பின்ன என்ன ?
வேணும்னா நீ தோல்விய ஒப்புக்க.. அவங்களே அர்த்தம் சொல்றாங்க
முதல்ல அர்த்தத்தை சொல்ல சொல்லுங்க.. அப்புறம் பேசலாம்
சரி சொல்லுங..

அடிமைத் தூது பயன்படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பயனிருக்காது - இளம்
தேமல் கொண்ட கன்னி வாழ இனியது கூறு

ஆனி முத்து வாங்கி வந்தேன்

பாடல்: ஆனி முத்து வாங்கி வந்தேன்
திரைப் படம்: பாமா விஜயம்
பாடியவர்கள்: பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலஷ்மி,
எல்.ஆர்.ஈஸ்வரி
இசை: எம்.எஸ்.வி
வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: சௌகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி
சுசீலா: ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
ஈஸ்வரி: அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
சுசீலா: ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
ஈஸ்வரி: அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
ராஜலஷ்மி: நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரம் இல்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரம் இல்லையடியோ .. அடியோ
அனைவரும்: ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
சுசீலா: எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஈஸ்வரி: ஏறிட்டு நான் அதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை
சுசீலா: எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
ஈஸ்வரி: ஏறிட்டு நான் அதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை
அந்தக் கன்னத்தில் என்னடி முத்து வண்ணம்
எந்தக் கள்ளத்தனத்தினில் வந்ததடி
சுசீலா: வாங்கிக் கொடுத்ததும் தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து சிந்துதடி
ஒரு முத்து இரு முத்து மும் முத்து
நால் முத்து ... அம்மம்மா
ராஜலஷ்மி: பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகுக் கைகளிலே
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஈஸ்வரி: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
சுசீலா: ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
ஈஸ்வரி: ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ராஜலஷ்மி: ஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ராஜலஷ்மி: மாமன் மக்கள் தேடிய செல்வங்கள் யாருக்கடி
சுசீலா: ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி
ஈஸ்வரி: கையில் உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
சுசீலா: வீட்டின் நலத்துக்கும்
நாட்டின் நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டுக்கு ... பிள்ளைக்கு ... ஊருக்கு .. நாட்டுக்கு...
அனைவரும்: பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
ஓஓஓஓஓஓஓஓஓஓ ....ஓஓஓஓஓஓஓஓஓ ...ஆஆஆஆஆஆஆஆஆஆ


அங்கே மாலை மயக்கம்

படம் : ஊட்டி வரை உறவு
குரல் : டி.எம்.எஸ்., பி.சுசீலா 
இசை : எம்.எஸ்.வி.
பாடல் : கண்ண்தாசன்
நடிகர்கள் : சிவாஜி, கே.ஆர்.விஜயா  
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்க்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
(அங்கே)
ஆடச் சொல்வது தேன்மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனிச் சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
(அங்கே)
கேட்டுக் கொள்வது காதலின் இனிமை
கேட்டால்  தருவது காதலி கடமை
இன்பம் என்பது இருவரின் உரிமை
யார் கேட்டாலும் இளமைக்குப் பெருமை
லாலாலாலா..லாலாலாலா..லாலாலாலா..
லாலாலாலா..லாலாலாலா..லாலாலாலா..
ஆஹாஹாஹா..ஆஹாஹாஹா
ஓஹோஹோஹோ.ஹ¥ஹ¥ஹ¥ஹ¤ம்..
(அங்கே)

அந்த சிவகாமி மகனிடம்

படம் : பட்டணத்தில் பூதம்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி
(அந்த)
கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி
மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை
இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை
இல்லாமல் வேலன் ஏதடி...
ஆ......ஆ......ஆஆஆஆ
அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
சேதி சொல்லடி... என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி....

அந்த மாப்பிள்ளை

பாடல்: அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
திரைப் படம்: பணம் படைத்தவன்
பாடியவர்கள்: பீ.சுசீலா, டி.எம்.சௌந்தர ராஜன்
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
வரிகள்: வாலி
நடிகர்கள்: எம்.ஜி.ஆர், கே.ஆர்.விஜயா
சுசீலா: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..ஓஓஓஓஓஓஓஓஓஓஓ
அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
கையைப் புடிச்சான்
என்னை கையை புடிச்சான்
அங்கே முன்னால் நின்றேன் பின்னால் சென்றேன்
வா வா என்றான்
கூடவே வா வா என்றான்
அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
கையைப் புடிச்சான்
என்னை கையை புடிச்சான்
அங்கே முன்னால் நின்றேன் பின்னால் சென்றேன்
வா வா என்றான்
கூடவே வா வா என்றான்
ஊர் அடங்கக் காத்திருந்தான்
ஓய்வில்லாமே பார்த்திருந்தான்
ஊர் அடங்கக் காத்திருந்தான்
ஓய்வில்லாமே பார்த்திருந்தான்
பால் பழத்தை வாங்கி வந்தான்
பள்ளியறையின் வாசல் வந்தான்
வெட்கத்திலே நானிருந்தேன்
பக்கத்திலே தானிருந்தான்

அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
கையைப் புடிச்சான்
என்னை கையை புடிச்சான்
அங்கே முன்னால் நின்றேன் பின்னால் சென்றேன்
வா வா என்றான்
கூடவே வா வா என்றான்
கண்ணுறங்க பாய் விரிச்சான்
கொடி இடையில் காய் பறிச்சான்
கண்ணுறங்க பாய் விரிச்சான்
கொடி இடையில் காய் பறிச்சான்
குத்து விளக்கைக் கொறச்சி வைச்சான்
கொதிச்சிருந்தேன் குளிர வைத்தான்
வெட்கத்திலே நானிருந்தேன்
பக்கத்திலே தானிருந்தான்

டி.எம்.எஸ்: ஓஓஓஓஓஓஓஓஓஓ
மண்ணளந்த பார்வை என்ன
மயங்க வைத்த வார்த்தை என்ன
மண்ணளந்த பார்வை என்ன
மயங்க வைத்த வார்த்தை என்ன
முத்து நகையின் ஓசை என்ன
மூடி வைத்த ஆசை என்ன
என்னருகே பெண்ணிருந்தா
பெண்ணருகே நானிருந்தேன்
அந்தப் பூங்கொடி பூத்திருந்தா
காத்திருந்தா
என்னைப் பார்த்திருந்தா
அங்கே கண்ணால் கண்டேன்
பின்னால் சென்றேன்
நீ தான் என்றேன்
வாழ்வே நீ தான் என்றேன்
கட்டழகைப் பார்த்து நின்னேன்
கண்ணிரண்டில் பாடம் சொன்னேன்
கட்டழகைப் பார்த்து நின்னேன்
கண்ணிரண்டில் பாடம் சொன்னேன்
மொட்டு சிரித்தாள் விட்டுக் கொடுத்தாள்
தொட்டுக் கொடுத்தேன்
தானும் கொடுத்தாள்
அம்மம்மா என்ன சுகம்
அத்தனையும் கன்னி சுகம் அந்தப் பூங்கொடி பூத்திருந்தா
காத்திருந்தா
என்னைப் பார்த்திருந்தா
அங்கே கண்ணால் கண்டேன்
பின்னால் சென்றேன்
நீ தான் என்றேன்
வாழ்வே நீ தான் என்றேன்

சுசீலா: அந்த மாப்பிள்ளை காதலிச்சான்
கையைப் புடிச்சான்
என்னை கையை புடிச்சான்
அங்கே முன்னால் நின்றேன் பின்னால் சென்றேன்
வா வா என்றான்
கூடவே வா வா என்றான்

ஆண்டவனின் தோட்டத்திலே

பாடல்: ஆண்டவனின் தோட்டத்திலே
திரைப் படம்: அரங்கேற்றம்
பாடியவர்: பி.சுசீலா
இசை: வி.குமார்
வரிகள்: கண்ணதாசன்
நடிகை: பிரமிளா
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயும் பூமியெங்கும் இளமை சிரிக்குது
வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது

குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு
அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு
குழந்தையிலே சிரிச்சது தான் இந்த சிரிப்பு
அதைக் குமரிப் பொண்ணு சிரிக்கும் போது என்ன வெறுப்பு
பொறந்ததுக்குப் பரிசு இந்த ...
பொறந்ததுக்குப் பரிசு இந்த சிரிப்பு அல்லவா
இது பொண்ணுக்காக இறைவன் தந்த பரிசு அல்லவா

பதமா இதமா சிரிச்சா சுகமா
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்
குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது
அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது
குளம் குளமா தவம் இருந்து கொக்கு சிரிக்குது
அது கொத்தப் போவதை மறந்து மீனும் சிரிக்குது
குளத்தை விட்டுக் கரையில் ஏறி நண்டு சிரிக்குது
குளத்தை விட்டுக் கரையில் ஏறி நண்டு சிரிக்குது
அதைக் கொண்டு போயி உண்டு பார்த்த நரியும் சிரிக்குது

பதமா இதமா சிரிச்சா சுகமா
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது
வேண்டும் மட்டும் குலுங்கிக் குலுங்கி நானும் சிரிப்பேன்
அந்த விதியைக் கூட சிரிப்பினாலே விரட்டி அடிப்பேன்
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது
ஆகாயம் பூமியெங்கும் இளமை சிரிக்குது

அன்புள்ள மான்விழியே


படம் : குழந்தையும் தெய்வமும்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி
நடிகர்கள் : ஜெய்சங்கர், ஜமுனா  
அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம் - நான்
எழுதுவதென்னவென்றால்  - உயிர்க்
காதலில் ஓர் கவிதை
அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம் - நான்
கைகளில் எழுதவில்லை  - அதைக்
கண்ணீரில் எழுதி வந்தேன் 
நலம் நலம்தானா முல்லை மலரே
சுகம் சுகம்தான முத்துச் சுடரே
இளைய கன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ
(அன்புள்ள)
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம்தானே நினைவிருந்தால்
இடை மெலிந்தது இயற்கையல்லவா
நடை தளர்ந்தது தனிமை அல்லவா
வண்ணப் பூங்கொடிபெண்மை அல்லவா
வாட வைத்ததும் உண்மை அல்லவா 
(அன்புள்ள)